முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
பிரம்மாண்டத்தில் பிரமாண்டம்
இதயத்தில் என்னென்ன வேட்கை !
இது இடைவேளை இல்லாத வாழ்க்கை !
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
....
நமது பள்ளி மகிழ்வு தரும் வீடு !
நாம் வணங்கும் புனிதமான கோயில் !
நம் சமுதாயத்தின் உயிர்நாடி !
எல்லோரையும் கவர்கின்ற அழகிய பிருந்தாவனம் !
🌲🌲இன்று (14/10/2018) நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது
மிகவும் எழுச்சியாகவும்
மாபெரும் மகிழ்ச்சியாகவும்
பார்ப்போருக்கு நெகிழ்ச்சியாகவும்
இந்நிகழ்வு நம் பள்ளிக்கு பெரியதொரு மறுமலர்ச்சியாகவும்
நிகழ்ந்தேறியது...
இதோ மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு...
🌺🌺இந்நிகழ்வில் நம் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்
பலர் கலந்துகொண்டு
தம் நெகிழ்ச்சியான அனுபவங்களை பதிவு செய்தனர்...
🌹🌹முன்னாள் மாணவர்கள் பலர்
தாங்கள் பயின்ற காலங்களில் தாங்கள் பெற்ற அனுபவங்களையும் அப்போது இருந்த ஆசிரியர்கள் எப்படி எல்லாம் அவர்களை வழி நடத்தினார்கள் என்பதையும் மிகவும் நெகிழ்சியாக சொன்னார்கள்
🍁🍁அவர்கள் செய்த சிறுசிறு குறும்புகளையும் கூட மறக்காமல் பதிவு செய்தார்கள்...
👑👑தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களை பற்றி கூறியபோது அந்த ஆசிரியர்கள் எல்லாம் அக்காலத்தில் எவ்வளவு சிறப்பாக பணியாற்றி இருந்தார்கள் என்பதை எங்களால் உணரமுடிந்தது... மிகவும் சிறப்பு
🍔🍔சத்துணவு டீச்சர் எங்களுக்கு அன்பாக வழங்கிய சாப்பாட்டையும் ... அந்த மாணவர்கள் இன்றும் மறக்கவில்லை...
🌳🌳தாங்கள் பயின்ற காலங்களில் ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மரக்கன்றை வளர்த்தோம் என்பதை சொன்னார்கள் ... அவர்கள் வளர்த்த மரக்கன்றுகள் இன்று வளர்ந்து நிழல் கூரையாக இன்று எங்களுக்கு இருக்கின்றது...
நன்றி
🌿🌿அந்த நாளில் ஆசிரியர்கள் எங்களை சிறு பிரம்பால் அடித்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்... ஆசிரியர்களை கண்டாலே நாங்கள் பயந்து நிற்போம்...
ஆனால் இன்று மாணவர்களோடு ஆசிரியர்கள் நண்பர்களைப் போல பழகி கற்பிக்கின்றனர் என்று கூறினார்... தற்கால கல்வி
⚽⚽முன்னாள் மாணவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது அதில் பள்ளி குழந்தைகளைப்போல உற்சாகமாக கலந்து கொண்டனர்... மிகவும் மகிழ்ச்சி
🥇🥈🥉வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் அவர்கள் பரிசுகள் வழங்கினர்...
👨👨👧👦👨👨👧👦மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று சந்திப்போம் என்ற உணர்வோடு கைகுலுக்கி சென்றனர்...
💐💐இவர்களின் சந்திப்பால் நாங்கள் பல்வேறு பாடங்களை கற்றுக் கொண்டோம்...
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
....
No comments: