புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு 


 பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்வு  இன்று 10-08-2024மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.





தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பட்டது.



இக்கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியை திருமதி. விஜயகுமாரி அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று பேசினார்.
 

மேற்பார்வையாளராக வட்டார கல்வி அலுவலர் திருமதி. மீனாட்சி அம்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
 

குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வு 







 

பள்ளி ஆசிரியர் திரு.மணிமாறன் அவர்கள் பள்ளி மேலாண்மை குழு நோக்கம் குறித்து பேசினார்.












வட்டார கல்வி அலுவலர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்திய தருணம் 








முன்னாள் பள்ளி மேலாண்மைக் குழு தலைவருக்கு சிறப்பு செய்த நிகழ்வு 






உறுப்பினர்கள் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு தலைவியாக திருமதி.மீனா முருகேசன் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.







 



பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள்  விளக்கம் & புதிய உறுப்பினர்கள் தேர்வு நெறியாளுகை - இரா.கோபிநாதன் ஆசிரியர்  


பள்ளி மேலாண்மை குழு நியமன உறுப்பினர்களாக புனவாசிப்பட்டி வார்டு உறுப்பினர்கள் திருமதி. அகிலா மற்றும் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.







 




















கடந்த பள்ளி மேலாண்மைக் குழு மிகவும் சிறப்பான முறையில் பணி செய்த இருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

















வட்டார கல்வி அலுவலர்,
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களால் இணைந்து பள்ளி வளாகத்தில் ஒரு  அழகு செடி நடப்பட்டது.


















கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் சுவையான தேநீர் & பிஸ்கட் வழங்கப்பட்டது.









நன்றி உரை திரு.கா.மணிமாறன் 








பள்ளி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நல் ஆலோசனைகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல.

No comments:

Powered by Blogger.