மெய்நிகர் வகுப்பறை திறப்பு விழா
உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா :09-02-2024
குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வு
இன்று 09-02-2024 மாண்புமிகு. இரா.மாணிக்கம் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ஐயா அவர்கள் தமது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டில் நமது பள்ளிக்கு மெய்நிகர் வகுப்பறையை (Smart class) திறந்து வைத்து அர்ப்பணித்தார்.
கிராமப்புற ஏழைக் குழந்தைகளும் தொழில்நுட்பங்கள் வழியாக தங்கள் அறிவை மேம்படுத்த மெய்நிகர் வகுப்பறை ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...
ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. சுமித்ராஇரவிராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.மீனாட்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மெய்நிகர் வகுப்பறை அமைய பேருதவி புரிந்த வார்டு கவுன்சிலர் உயர்திரு.கோபால் அவர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தார்.
மெய்நிகர் வகுப்பறை அமைய பேருதவி செய்த ஊர் முக்கியஸ்தர் திருவாளர்.வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
பள்ளியின் PTA தலைவர் திரு.இராஜலிங்கம் ஐயா,
SMC தலைவர் திருமதி.சசிகலா அவர்கள் (தேனீர் உபசரிப்பு)
மற்றும் உறுப்பினர்கள், பள்ளி பெற்றோர்கள் , முன்னாள் மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் & சத்துணவு ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியாக குழுப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.
வரவேற்பு கோலங்கள்
💐💐💐💐💐💐💐💐
வருகை தந்த அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றிகள்
ஊராட்சி தொடக்க ஒன்றியப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments: