புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

உலக சுற்றுச்சூழல் தினம்

 







உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புனவாசிப்பட்டி கிராமத்தில் இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து, மரியாதைக்குரிய திரு. முருகேசன் அய்யா மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உயர்திரு. ராஜலிங்கம் அய்யா அவர்களின் தலைமையில், இயற்கையைப் பேணும் உன்னத எண்ணத்துடன் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.

மரக்கன்று நடவு பணிக்கு JCB மூலம் இலவசமாக உதவி புரிந்த மதிப்புக்குரிய திரு. M. பிரபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இரண்டு ஆண்டுகளாக அரச மரக்கன்றுகளைப் பேணி, பாதுகாத்து, இயற்கையின் அழகில் நிரந்தரமாக வளர்த்திட அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மரியாதைக்குரிய திரு. M. பாலசுப்பிரமணி (பாலன்) அவர்கள், நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின்படி இயற்கைக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றார்.
இயற்கையை நேசிப்போம்! இயற்கையைப் பாதுகாப்போம்!
என்றும் இயற்கையின் பாதையில் வாழ்ந்திடுவோம்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, எனது தோழரின் வழிகாட்டுதலின்படி, இயற்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட எனது முயற்சியாக அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.
சி. கார்த்திகேயன் சமூகம் மற்றும் இயற்கை செயல்பாட்டாலர்

No comments:

Powered by Blogger.