பள்ளி ஆண்டு விழா 28-03-2025
பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.இரா.விஜயகுமாரிஇராதாகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இவ்விழாவை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் விழா இனிதாய் தொடங்கியது.
பள்ளி ஆசிரியர் திருமதி.சிவச்செல்விதினகரன் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.
புனவாசிப்பட்டி ஊரின் காரியக்காரர் திரு.நடேசன் அவர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.இராஜலிங்கம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.மீனாமுருகேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திரு.மயில்வாகனம் அவர்கள் விழா சிறப்பாக நடைபெற உதவினார்.
அருகாமை பள்ளி ஆசிரியர்கள் திரு.தட்சிணாமூர்த்தி, திரு.சரவணன்,திரு.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கோலாட்ட பயிற்றுநர் திரு.ஸ்ரீதரன் , நடன ஆசிரியர் திரு.அறிவு மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற உதவி புரிந்தனர்.
10 வருடங்கள் பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய திருமதி.சந்தியா ஆசிரியர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
புகைப்பட கலைஞர்களுக்கு சிறப்பு செய்த நிகழ்வு
சிறப்பான முறையில் மாணவர்களுக்கு ஒப்பனை
திருமதி.நந்தினிகுருபிரசாந்த்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் திருமதி.அகிலா அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர் & பட்டிமன்ற பேச்சாளர் திரு.பழனியப்பன் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய தருணம்.
திரு.கோபிநாதன் அவர்கள் ஆண்டு விழா நெறியாளுகை செய்த நிகழ்வு
பள்ளிக்கு 100% வருகை புரிந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நடனம் மற்றும் கோலாட்ட ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய நிகழ்வு
ஆசிரியர் திரு.மணிமாறன் அவர்களின் மகளுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பிடம் பிடித்தன.
பள்ளியில் சிறப்பாக பணியாற்றுவதற்காக ஊர் சார்பாக பொன்னாடை அணிவித்து சிறப்பு நிகழ்வு
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தன.
விழாவின் போது இடையே கேட்கப்பட்ட வினாவிற்கு சரியான பதில் சொல்லி பரிசு பெற்ற முன்னாள் மாணவர்கள் & பெற்றோர்கள்
சிறப்பான முறையில் ஒளிஒலி அமைத்து கலைஞர்களுக்கு சிறப்பு பரிசுகள்
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தரு.மணிமாறன் அவர்கள் நன்றி கூறினார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.
No comments: