புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

லப்டப் லப்டப்... லப்பு டப்புனு

 லப்டப் லப்டப்... லப்பு டப்புனு துடிக்குதாமே


நோயாளியாக வாத்தியாரு மருத்துவராக மாணவர்கள் 


ஆசிரியருக்கு வைத்தியம் பார்த்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்...













இதயத்துடிப்பு மானி கருவியைக் கண்டுபிடித்தவர் ரெனே லென்னக் என்கிற பிரெஞ்சு மருத்துவர்.

 1781-ல் பிறந்த இவரின் முழுப் பெயர் ரினே தியோஃபில் ஹையஸிந்த் லென்னே (Rene Theophilie Hyacinthe Laennec)























தற்போது பரவலாக உபயோகிக்கப்படும் இதயத்துடிப்பு மானி 'பைனாரல் ஸ்டெத்’ (Binural Steth) என்பது. இதில் இரண்டு செவித் துண்டுகள், ஒரு மார்புத் துண்டு, ஆங்கில Y எழுத்துப் போன்ற குழாய் போன்றவை உள்ளன. 





மார்புத் துண்டு நோயாளியின் உடல் மீது வைக்கப்படுகிறது. 

செவித் துண்டுகள் மருத்துவரின் இரு காதுகளிலும் வைக்கப்படுகின்றன. குழல் வழியாக நோயாளியின் இதயச் சத்தங்களும், நுரையீரல் சத்தங்களும் கேட்கும். 





பைனாரல் இதயத்துடிப்பு மானி, 1855-ல் டாக்டர் கம்மன் என்பவரால் உருவாக்கப்பட்டது.


இதயத்துடிப்பு மானி அணிவது மருத்துவர்களுக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. 


2012 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு ஒன்று இதயத்துடிப்பு மானி அணிவதால் மருத்துவர்களின் மீது உயர்ந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்கிறது


No comments:

Powered by Blogger.