புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

விதைப்பந்து, பனை விதை நடும் பணி...


விதைப்பந்து, பனை விதை நடும் பணி


14-09-2019
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
புனவாசிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பாமடை ஏரிக்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் மற்றும் விதைப்பந்துகள் நடவு செய்யப்பட்டன.





இதில் மரம் வளர்ப்பு குழு குளித்தலை தொகுதி ஒருங்கிணைப்பாளர் திரு.S.ஸ்ரீதரன், புதுமை விரும்பி ஆசிரியர் திரு. கோபிநாதன்,இயற்கை ஆர்வலர்கள் திரு. பாலசுப்பிரமணி, வேல்முருகன் ,
சண்முகம், நந்தகுமார், கார்த்திக், சதீஷ்,விமல்,கோகுல், சரவணன், இயற்கை மீட்புக்குழு பனை பிரபு, பாசுகரன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் என 50க்கும் மேற்பட்டோர் இணைந்து தமிழகத்தை குளுமையாக்கும் நோக்கில் விதைகளை நடவு செய்தனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் திருமதி.பவானி, திருமதி.சரஸ்வதி, திருமதி.சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு போஷன்  அபியான் 1000 நாள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரம் வளர்ப்பு குழு சக்திவேல் அவர்கள் நன்றி கூறினார்.











🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.