படிப்புடன் கூடிய விவசாய புரட்சிக்கான சிறு முயற்சி...
இன்று 29/07/2019 நமது பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சுரை விதைகள் சில எண்ணிக்கையில் பள்ளியின் சூழல் மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது...
அவ்விதைகளை தங்களின் (பெற்றோர்கள்) உதவியுடன் இந்த ஆடி பட்டத்தில் விதைத்து சிறப்பான முறையில் வளர்த்து (தினமும் மாணவர்களே வளர்த்து) வர வேண்டும்...
சிறப்பாக வளர்த்து முதலில் சுரைக்காய் அறுவடை செய்யும் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு பள்ளி சூழல் மன்றத்தின் மூலம் வழங்கப்படும்...
குறிப்பு : இன்று வழங்கிய விதைகளை மட்டுமே விதைத்து போட்டியில் பங்கு பெற தங்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கவும்...
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதை இரகம் வழங்கப்பட்டுள்ளது...
வேறு இரகங்களை பயன்படுத்தினால் தெரிந்து விடும்...
இது படிப்புடன் கூடிய விவசாய புரட்சிக்கான சிறு முயற்சி...
முதல் வெற்றியாளர் நான்காம் வகுப்பு மாணவி வே.மோனிகா த/ பெ வேலவன்
நன்றி.
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments: