மாணவர்கள் கேட்ட மிகப்பெரிய பரிசு
மாணவர்கள் கேட்ட மிகப்பெரிய பரிசு
பப்லுவ கூட்டி வாங்க சார் ...பப்லுவ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு...
முதல் பருவத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கும் 100 சதவீதம் வருகை புரிபவர்களுக்கும் பப்லு கையால பரிசு தருவதாக சொல்லி இருந்தேன் ...
காரணம் கடந்த ஆண்டுகளில் பப்லு தான் பல வகுப்புகளில் பாடங்களை நடத்தியது...
அந்த பப்லு யாருன்னு தெரியுமா ?
அது ஒரு குட்டி பொம்மை வாத்து
அந்தக் குட்டி வாத்துக்கு பெயர் சூட்டியதே நம்ம மாணவர்கள் தான்...
வீட்டுப்பாடம் தொடர்ந்து செய்யாமல் வந்த ஒரு மாணவன் பப்லு சொன்னதும் தினமும் வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பித்தார்...
அதுவே மிகப்பெரிய வெற்றி ...
மாணவர்கள் கேட்ட பரிசு பப்லு தான் வேண்டும் என்றார்கள்...
கொஞ்சம் விளையாடி மகிழ்ந்தனர்...
நலம் விசாரித்துக் கொண்டனர்...
பரிசையும் பெற்றுக்கொண்டனர்...
மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்
பரிசு பெற்றவர்கள்
ச.அரவிந்த்
பா.விக்னேஷ்
சி. புஷ்பவள்ளி
ரா.ஸ்ரீவர்ஷினி
யோ.பிரவீனா
ரா.நாகலட்சுமி
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...
No comments: