விடுகதைகள்
1.எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
2. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு அவர் யார் ?
3. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
4.அமைதியான பையன் ஆனால் அடிக்காமலேயே அழுவான் அவன் யார்?
5.வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் அவன் யார்?
6.வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
7. உதை வாங்கி, ஊதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் அவன் யார்?
8. மூன்று பெண்களுக்கு ஒரே முகம். முதல் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசி பெண் வீட்டிலே! அவர்கள் யார்?
9 ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய் கடை அது என்ன?
1. உடம்பில்லா ஒருவன் 10 சட்டை அணிந்திருப்பான் அவன் யார்?
விடைகள் :
1.விக்கல்
2.கொசு
3. மீன் வலை
4.பனிக்கட்டி
5. மோதிரம்
6. ஆமை
7. தண்டோரா
8. முதலை , உடும்பு , பல்லி
9. தேன்கூடு
10.வெங்காயம்
No comments: