ஆசிரியர் தின கொண்டாட்டம்
மாணவர்களின் அன்பு மழையில் நனைந்த பள்ளி ஆசிரியர்கள்*...
🌹🌹🌹வகுப்பறையில் ஆசிரியர்கள் நுழைந்ததும் பூக்களை தூவி பூங்கொத்து கொடுத்து தம் பிஞ்சுக் கரங்களால் கைக்கூப்பி வரவேற்றனர்...
🌹🌹 வகுப்பறையில் ஓர் வாணவேடிக்கை நிகழ்த்தி விட்டார்கள் பலூன்களைக்கொண்டு
🌹🌹இடியோசையாய் அவர்களின் கைதட்டல் ஓசை...
🌹🌹 அவர்களின் அம்மா செய்து கொடுத்த பிட்டு என்று ஒரு மாணவன் ஆசையாய் கொடுத்து வாழ்த்து கூறினார்.
🌹🌹கடலைமிட்டாய், முறுக்கு என பிட்டு முதல் லட்டு வரை- இத்தனை இணைப்புகளையும் விட இனித்தது மாணவர்களின் புன்னகை சிந்தும் முகத்துடன் கூறிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
🌹🌹எம் பள்ளி தலைமையாசிரியர் கேக் வெட்டி அனைவருக்கும் வாழ்த்து கூறினார்...
🌹🌹எங்க பள்ளி மோகனா டீச்சர் அவர் அம்மா செய்து கொடுத்த பொங்கல் என்று இனிப்போடு வாழ்த்துக் கூறினார்...
🌹🌹இன்று எங்களுக்கு அன்பு கட்டளை இட்டார்கள் அன்பு மாணவர்கள் நாங்கள் கொடுக்கும் பேனாவில் தான் இன்று எழுதவேண்டும் என்று நாங்களும் ஏற்றுக்கொண்டோம்..
🌹🌹 நிச்சயம் எழுதுவோம் பேனாவில் எழுத்துக்களை மட்டுமல்ல ...
எதிர்கால சமுதாயம்
எங்கள் கைகளில் என்று...
🌹🌹மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஏணியாய் தோணியாய் எங்கள் பணியினை பொறுப்போடு செய்வோம்...
ஊ.ஒ.தொ.பள்ளி
புனவாசிப்பட்டி...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments: