சுதந்திர தின விழா கொண்டாட்டம்
80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டியில் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா இன்று மிகுந்த உற்சாகத்துடனும் தேசப்பற்றுடனும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. பா. கலைச்செல்வி அவர்கள் தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து வரவேற்பு வழங்கினார்.
இவ்விழாவில் திரு. இரா. கோபிநாதன், ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், மாணவர்கள் நாட்டுப்பற்று, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வுடன் வளர வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.
விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் தேசப்பற்று நிறைந்த கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், மற்றும் உரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் திறமையான கலைநிகழ்ச்சிகள் அனைவரின் பாராட்டையும் பெற்றன.
ஆசிரியர் திரு. கா. மணிமாறன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்
இறுதியாக தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
ஜெய் ஹிந்த்! 🇮🇳


































































No comments: