மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வைத்த மரக்கன்று
கரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ஐயா வைத்த மரக்கன்று...
தன் பொற்கரங்களால் நடவு செய்து
கன்றை சுற்றி பாத்தி அமைத்து
நீர் ஊற்றி
புகைப்படங்கள் எடுப்பதற்காக மட்டும் நடுவதல்ல மரக்கன்றுகள் !
பூமி பந்தை காப்பதற்காக மரம் வளர்ப்போம்!
முதன்மை கல்வி அலுவலர்...
நமது பள்ளி வளாகத்தை இன்று முதல் அலங்கரிக்க போகிறது முதன்மை கல்வி அலுவலர் ஐயா வைத்த புங்கன் மரக்கன்று !
மரம்
மண்ணிற்கு மருதாணி
இயற்கையின் சீதனம்
அழகின் ஆசனம்
மரம்
உண்ண உணவு தரும் !
உடுக்க உடை தரும் !
உறங்க வீடு தரும் !
மரம் ஒரு
பச்சையக் கடவுள்…
மாசுகளிலிருந்து
மனிதரை காப்பதால் .
மரம் ஒரு
நிச்சயக் கடவுள் …
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .
மண்ணுக்கும்
மரம்தான் உரம் !
மழைக்கும்
மரம்தான் வரம் !!
மனிதா …
கோடாரியை தூர எறி!
மரம் காக்கும் … புது
கொள்கைத் தரி !!
மரம் தான் ! மரம் தான்!
மண்ணின்
வாரம்தான்! வாரம்தான்!
இதை உணர்ந்தால்
நலம் தான்! நலம் தான்!
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,
புனவாசிப்பட்டி ,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.
No comments: