நம் பள்ளி நம் பெருமை
நம் பள்ளி நம் பெருமை
பள்ளி மேலாண்மை குழு பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நமது பள்ளியில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
வரவேற்பு
இல்லம் தேடி கல்வி மைய
தன்னார்வலர்கள்
பள்ளி மேலாண்மை குழு அமைப்பு உறுப்பினர்கள் தேர்வு முறை குறித்து திரு.மணிமாறன் அவர்கள் விளக்கம் அளித்தார்.
SMC உறுப்பினர் கூட்ட விதிமுறைகள் & பணிகள் பற்றிய கருத்துகளை திருமதி.சிவச்செல்வி ஆசிரியை எடுத்துரைத்தார்.
பள்ளி பெற்றோர்களின் பங்கு குறித்து திருமதி.சந்தியா அவர்கள் கருத்துகளை முன்வைத்து பேசினார்.
இக்கூட்டத்தில் SMC தலைவி திருமதி.இராஜலட்சுமி ராஜன்
PTA தலைவர் திரு.இராஜலிங்கம்
வார்டு உறுப்பினர்கள் திருமதி.அகிலா
இரஞ்சிதம் பரமசிவம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளி பெற்றோர்கள் 90 க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு தங்களின் மேலான பங்களிப்பினை செய்து மிகவும் உற்சாகமாக பள்ளி மேலாண்மை குழு அமைத்து சிறப்புடன் பள்ளி முன்னேற்றத்திற்கு செயல்படுவோம் என்று அனைவரும் ஒரு மனதாக கூறுகின்றனர்.
SMC மறு கட்டமைப்புக்கு பின் செயல்பாடுகள் குறித்து திரு.கோபிநாதன் அவர்கள் கலந்துரையாடல் செய்து பேசி இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
மிகவும் சிறப்பான முறையில் பங்கு கொண்டு கருத்துக்களை பதிவு செய்த பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
சிறப்பு பேச்சு திரு.சாமியப்பன்
பெற்றோர் உரை திருமதி.இலக்கியா
பள்ளி பெற்றோர் திருமதி.கோமதி அவர்கள் மிகவும் சுவையான தேனீர் வைத்து உதவினார்.
பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர்கள் இணைந்து மரக்கன்று ஒன்றை நடவு செய்தனர்.
பெற்றோர்கள் , தன்னார்வலர்கள் & ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அவரது கணவர் திரு.இராதாகிருஷ்ணன் மதிய உணவு வழங்கினார்.
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழா சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்தனர்.
கூட்ட அரங்கில் மின்விசிறி பொருத்தி கொடுத்து உதவிய திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றிகள்
சரண் நான்காம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.
Super Sir. I miss you all
ReplyDeleteSuper sir....na atten Panna mudila Miss panniten
ReplyDelete