புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

புனவாசிப்பட்டி புதுமை பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்










புதுமை பள்ளி குடியரசு தின விழா கொண்டாட்டம்.

நம் பாரத நாட்டின் 70 ஆம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது...

பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.சரஸ்வதி முருகேசன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

விழாவிற்கு PTA தலைவர் திரு.இராஜலிங்கம் அவர்கள் வந்திருந்து சிறப்பு செய்தார்.

இவ்விழாவினை பள்ளி தலைமையாசிரியர் திருமதி.இரா.விஜயகுமாரி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

பள்ளியின் உதவி ஆசிரியை திருமதி.ரா.சந்தியா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.


இவ்விழாவில் மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.


இவ்விழாவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் , இன்னாள் ,முன்னாள் மாணவர்கள் & ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

உதவி ஆசிரியர் திரு.இரா.கோபிநாதன் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

இவ்விழாவிற்கு இனிப்புகள் வழங்கிய அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.


விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி.


No comments:

Powered by Blogger.