புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

புதுமை பள்ளி பிறந்தநாள் கவிதை

 புதுமைப் பள்ளி 




கனவுகளை விதிக்கின்ற

 கற்பக விருட்சமே 

புதுமை பள்ளியே


 உன்னில் எத்தனை எத்தனை புதுமைகள்


 வெற்றிக்கான விதைகளை விதைக்கும் விசித்திரமானவள் நீ


 வளர்ச்சிக்கான வழிகளை கற்றுக் கொடுக்கும் மூச்சுக்காற்று நீ


உன்னுள் வந்து செல்பவர்களுக்கு மட்டும்தான் வாழ்வின் அர்த்தம் புரியும் வாழ்க்கையும் ரசம் தெரியும்


உன் பக்கம் ஒன்றியத்தையே திரும்பி பார்க்க வைத்தாய் சாதனைகள் பல மாவட்ட அளவில் நிகழ்த்தி விட்டாய்


 நின்ற இடத்திலேயே நின்று ஏணியாய் நித்தம் பலரை உயர்வுக்கு ஏற்றி விடும் அதிசய பிறவி தான் நீ



வாட்சப்பால் முன்னாள் மாணவர்களை வசியம் செய்து விட்டாய்


 இன்று உன் இதயம் இணையத்திலும் துடிக்கிறது


 முகநூலில் உன் முகவரி முத்திரை பதிக்கிறது 


யூட்யூபில் தனக்கென தனி இடம் பிடிக்கிறது


 விண்ணை அளக்கும் மரங்கள்

 பசுந்தளை விரிக்கும் குடைகள் 


இதுவே உன் புதுமை தோற்றம் 

அதுவே யாவர்க்கும் ஏற்றம்


 புரட்சி பயணத்தில் புதுயுகம் நீ

 புதுமைகள் படைப்பதில் தனி யுகம் நீ


 புதுமைகள் நோக்கிய பயணம் தொடரும்


 மாற்றத்தை நோக்கி ஒரு யுகம் மலரும்


 நீ வாழ்க பல்லாண்டு 

வளர்க நின் புகழ் !

No comments:

Powered by Blogger.