புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

வகுப்பறை வண்ணத்துப்பூச்சி

 வகுப்பறையில் வளர்த்த வண்ணத்துப்பூச்சி 

றெக்க முளைத்து விட்டது சார்

 றெக்கை முளைத்துவிட்டது சார்..


🦋🦋அன்று பள்ளிக்கு சென்றபோது மாணவர்கள் அனைவரும் உற்சாகத்தோடும் , மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருமித்த குரலில்

றெக்கை முளைத்த விட்டது சார் ...






🦋🦋அவர்களின் உற்சாகத்திற்கு

காரணம் அவர்கள் வளர்த்து வந்த புழு கூட்டுப்புழுவாகி பின் முழு றெக்கை முளைத்த வண்ணத்துப்பூச்சியாக வளர்ந்து விட்டதாம் அதுதான் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி...


🦋🦋ஆம் அவர்களுக்கு பறக்க சிறகு முளைத்து விட்டது போல ஓர் உற்சாகம்...




🦋🦋ஏனெனில் ஒரு வார காலமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிடைத்த ஆராய்ச்சியின் பரிசு அல்லவா !


🦋🦋உண்மையில் அனைத்து மாணவர்களும் கற்றுக்கொண்டு விட்டார்கள் பாடத்தை மட்டுமல்ல ஆராய்ச்சி அனுபவத்தையும்...



👯👯பிறகு வண்ணத்துப்பூச்சியை சுதந்திரமாக பறக்க விட்டு ரசித்தனர்...


வண்ணத்துப்பூச்சி பறந்து மட்டும் செல்லவில்லை அறிவியல் பாடத்தையும் கற்றுக் கொடுத்தே சென்றுள்ளது...



முட்டை முதல் வண்ணத்துப்பூச்சி வரை... வாழ்க்கைச் சுழற்சி



சுதந்திரமாக பறக்கவிடப்பட்ட வண்ணத்துப்பூச்சி



கூட்டுப் புழு வண்ணத்துப்பூச்சி ஆக மாறிய தருணம்

 

கூட்டுப் புழு பருவம்





புழுப்பருவம்
 (லார்வா) உடன் மாணவர்கள்








வளர்த்து சுதந்திரமாக பறக்கவிட்டு மகிழ்ந்தனர்

மாணவன் தீபக் & நண்பர்கள்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.

வீடியோ பாடல் 👇👇👇


No comments:

Powered by Blogger.