சுதந்திர தின விழா கொண்டாட்டம்
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. விஜயகுமாரி அவர்கள் வரவேற்று பேசினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி. சசிகலா மாணிக்கம் அவர்கள் கொடி ஏற்றி வைத்து கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்
பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் - விடுதலை போராட்ட வீரர்கள் மாற்றுடை , பேச்சு, பாட்டு, கவிதை என பல வகையான கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் சிறப்புடன் நிகழ்த்தினார்கள்.
பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் (திருமதி.சசிகலா, திருமதி.இலக்கியா, திருமதி.அகிலா திருமதி.இலட்சுமி, திருமதி.கிருஷ்ணவேனி, திரு.கார்த்திகேயன்,
திரு.பன்னீர்செல்வம், திரு.மயில்வாகனம், திரு.இரா.கோபிநாதன்) சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி விழா ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ஒலி ஒளி அமைத்து உதவிய திரு.தைலாப்பிள்ளை அண்ணாருக்கு நன்றிகள் பல...
மாற்றுடை போட்டி & கலை நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை சிறந்த முறையில் தயார்படுத்தி அழைத்து வந்திருந்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி ,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் ,
கரூர் மாவட்டம்
No comments: