புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாணவர் விவசாய போட்டி


இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு , பாரம்பரிய காய்கறிகளை மீட்டெடுத்தல் சார்ந்து 


இன்று 28-07-2023 நமது பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாட்டு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.



ஒன்றாம் வகுப்பு சுரை விதைகள் 




இரண்டாம் வகுப்பு சுரை விதைகள்




மூன்றாம் வகுப்பு பரங்கி விதைகள்


நான்காம் வகுப்பு பரங்கி & பூசணி விதைகள்


ஐந்தாம் வகுப்பு பரங்கி & பூசணி விதைகள்


ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியே சில எண்ணிக்கையில் விதைகள் வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விதைகளை பெற்றோர்களின் உதவியுடன் அவர்கள் வீடுகளில் விதைகளை விதைத்து நன்முறையில் வளர்த்து சிறப்பாக அறுவடை செய்யும் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக முதல் மூன்று அறுவடை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.


விதிமுறைகள்:





1. இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்குள் (30-07-2023 ஞாயிறுக்குள்) விதைகளை பெற்றோர்களின் உதவியுடன் மாணவர்களே விதைத்தல் வேண்டும்.




2. விதை விதைக்கும் போது ஒரு புகைப்படம் வளர்ந்து வரும் போது ஒரு புகைப்படம், பூக்கும் போது & அறுவடை செய்யும் போது கட்டாயம் புகைப்படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும்.






 3.முதல் அறுவடை செய்து ( காய் நன்றாக விளைந்த பிறகு ) பள்ளிக்கு எடுத்து வருபவர்களுக்கு வகுப்பிற்கு மூன்று பரிசுகள் வழங்கப்படும்.







பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் வழி காட்டி வெற்றி பெற உதவிட வேண்டுகிறோம்.




ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம். கரூர் மாவட்டம் 

No comments:

Powered by Blogger.