குதிரை குலுக்குதல் கோவில் திருவிழா
குதிரை குலுக்குதல் தேர்த்திருவிழா
கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், புனவாசிப்பட்டி அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா
19/04/2019 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு குதிரையுடன் சென்று தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வந்தனர்.
21/04/2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் தேர்நத்தம் சென்று அம்மனுக்கு கரகம் பாலித்தல் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான குதிரை குலுக்குதல் நிகழ்ச்சி இரவு ஒரு மணி அளவில் நடைபெற்றது. இரவை வண்ணமயமாக்கிய வானவேடிக்கை நிகழ்சியும் ,மாவிளக்கு பூசையும் மிகவும் சிறப்பாக
நடைபெற்றது.
22/04/2019 திங்கட்கிழமை அக்னி சட்டி, அலகு குத்துதல் , பொங்கல் வைத்தல், படுகளம், சூளாடு சரங்குத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
23/04/2019 செவ்வாய்க்கிழமை கிடா வெட்டுதல் மா விளக்கு கம்பம் விடுதல் மஞ்சள் நீராடல் நடைபெற உள்ளது.
No comments: