புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

முன்னாள் மாணவர்கள் எழுச்சிமிகு கூட்டம்











இமயம் போல இதய உறுதியுடன் எங்கும் எதையும் சாதிக்கும் திறன் வேண்டும் !

சின்ன சின்ன தொடக்கமே பெரிய பெரிய சாதனைகள்!

தாஜ்மஹால் ஒரே நாளில் தோன்றியது இல்லை!

சிறிய விதையில் இருந்து தானே பெரிய ஆல விருச்சகம்! ...

எழுச்சிமிகு முன்னாள் மாணவர்கள் அமைப்பு கூட்டம்


🌹🌹இன்று (30/09/2018) முன்னாள் மாணவர்கள் ஆயத்தக்கூட்டம் நமது பள்ளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

🌹🌹இக்கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் *திரு ராஜலிங்கம் ஐயா* அவர்களும் ,ஊர் *நாட்டாமை தர்மராஜ் ஐயா* அவர்களும்
கலந்து கொண்டனர்...


நமது பள்ளியின் முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் *திரு. மருதமுத்து ஐயா அவர்கள்* கலந்து கொண்டது சிறப்பு , பள்ளி முன்னாள் மாணவர் *திரு. வேலாயுதம் ஐயா* அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நம் பள்ளியின் முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி பேசினார் ...


🌳🌳பள்ளியின் உதவி ஆசிரியர் *திரு. கோபிநாதன் அவர்கள்* அனைவரையும் வரவேற்று பேசினார்...


🌳🌳முன்னாள் மாணவர் *திரு. வேல்முருகன்* *ஒருங்கிணைப்பாளர்* அவர்கள் இக்கூட்டத்தின் தீர்மானங்களையும் முன்னாள் மாணவர்கள் செயல்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தார்...

🌳🌳முன்னாள் மாணவர்கள் அமைப்பின் செயல்வீரர்கள் *திரு ராஜ்குமார் அவர்கள்* (தமிழக காவல்துறை)
*திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள்* , *திரு. சரவணன்* அவர்கள்,

இவ்வமைப்பின் போர்வாள் *திரு.நேரு* அவர்களும் சிறப்பாகப் பேசினர்...

🌳🌳இக்கூட்டத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்...

*இக் கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்* :

🌳🌳அக்டோபர் 14  2018 (ஞாயிறு )அன்று , 27-10-1964 முதல் நம் பள்ளியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் *முன்னாள் மாணவர்கள் தினம்* கொண்டாடுவது...


🌳🌳நமது பள்ளியின் வளர்ச்சிக்காக வளர்ச்சி நிதியினை திரட்டுதல்...


🌳🌳முன்னாள் மாணவர்களின் செயல்பாடு மற்றும் பங்களிப்பை அதிகரித்தல்...


🌳🌳முன்னாள் மாணவர்கள் வங்கி கணக்கு ஏற்படுத்துதல்.


🌳🌳 இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் இன்னாள் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது...


🙏🙏 இக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் அவர்களின் நன்றி நவிலலுடன் இனிதே நிறைவுற்றது.


*அரும்பின் மாற்றம் மலராகிறது*

*காயின் மாற்றம் கனியாகிறது*

*மாற்றங்களே வாழ்வின் ஏற்றங்கள்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.