புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

போலியோ சொட்டு மருந்து முகாம்





இன்று 10/03/2019 ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்:




72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

நாடு  முழுவதும் போலியோ முகாம் இன்று (மார்ச் 10) நடைபெற உள்ளது.


இன்றைய தினத்தில் தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


 சுகாதாரத் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் அவர்களில் அடங்குவர்.



இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து  வழங்கப்பட்டு வந்தது.



போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தபோதிலும் குழந்தைகளுக்கு  சொட்டு மருந்து வழங்குவது தொடர்ந்தே வருகிறது. இருப்பினும் நிகழாண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்க  மத்திய அரசு முடிவு செய்தது.



அதன்படி, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் போலியோ சொட்டு மருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.



தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 40 ஆயிரம் முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.