புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பரிசு



நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பரிசு


🥇🥇ஐந்தாம் வகுப்பு மாணவி *ரெ.கற்பக ஶ்ரீ தனது சிறுசேமிப்பு தொகையைக் கொண்டு தன் பெற்றோர் உதவியுடன் தம் வகுப்பு ஆசிரியருக்கு (அவரது தோழருக்கு ) வேஷ்டி சட்டை எடுத்து கொடுத்தார். 





🥇🥇 அவர் ஆசிரியர் மேல் கொண்ட அன்பும் பற்றும் போற்றுதலுக்குரியது.


🌴🌴முதல் முறையாக இதுபோல் ஐந்தாம் வகுப்பு மாணவி வழங்கியது மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது.


🌺🌺 ஆயிரம் ஆடைகள் இருந்தாலும் என் அன்பு மாணவி கொடுத்த இந்த உடைதான் எனக்கு என்றும் மிகச் சிறப்பு


🍃🍃மேலும் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கிய பிஞ்சுக் கரங்களுக்கு வாழ்த்துகள்



☘️☘️இந்த பரிசுகளை விட மாணவர்கள் அனைவரும் நன்கு படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவதே பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் மிகப் பெரிய பரிசு...



🦋🦋அந்த மிகப் பெரிய பரிசை நோக்கி அனைவரின் வெற்றிப் பயணம் தொடரட்டும்...


வாழ்த்துகள்




💐💐💐💐💐💐💐💐

இரா.கோபிநாதன்,

*புதுமை விரும்பி ஆசிரியர்.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.