புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

கரூர் CEO வழங்கிய மகத்தான பரிசு

 கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயா வழங்கிய முத்தான முதன்மை பரிசு




கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.மதன்குமார் ஐயா அவர்கள் புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அனைத்து சிறப்பான செயல்களையும் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் இன்று HP Colour Printer வழங்கினார்.





இந்த சிறப்பு ஊக்க பரிசு எமது பள்ளிக்கு கிடைத்த பெரும்பேறு.




வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற உயரிய எண்ணம் கொண்டவர் நமது முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்கள்.



கொடுப்பது அவரின் பெருந்தன்மை பெற்றதை பகிர்வது நமக்கு மகிழ்ச்சி என்பதால் இதை மகிழ்வோடு பகிர்கின்றோம்.


இந்த  பரிசு பள்ளி ஆசிரியர்களை மென்மேலும் திறம்பட தொய்வின்றி செயல்பட ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கிறது.


பரிசு வழங்கிய கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ,PTA & SMC  சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.



ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.



No comments:

Powered by Blogger.