Pages

Wednesday, 13 November 2019

சரித்திர நாயகர்களுக்கு வாழ்த்து




வண்ண வண்ண ஆடை அணியும் அழகிய சிட்டுக்களே

துள்ளிக் குதித்து ஓடுகின்ற சின்ன மான்களே

எப்பொழுதும் புன்னகை தவழும் மயில்களே

பொக்கை வாயைத் திறந்து பாட்டுப் பாடும் குயில்களே...

நீங்கள்  தான் பூவுலகை அழங்கரிக்க வந்த நட்சத்திரங்கள்...

நேரு மாமாவின் இதயத்தை அழங்கரித்த ரோஜாக்கள்

நீங்கள் தான்
எதிர் கால அரசியல் !
வருங் கால ஆட்சியர் !

விவசாயியும் நீ தான் !
விஞ்ஞானியும் நீ தான் !

கவிஞனும் நீர் தான் !
கலைஞனும் நீர் தான் !

வாருங்கள் பிள்ளைகளே உங்கள் பயணம் இனிதாகும்...

உங்கள் சாதனை அம்மாவிற்கு மகிழ்ச்சி

உங்கள் வெற்றி அப்பாவிற்கு புத்துணர்ச்சி

உங்கள் வளர்ச்சி ஆசானிற்கு மனமகிழ்ச்சி...

இலச்சியத்தோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

சாதனைகளாய் மலரட்டும்...

வருங்கால சரித்திரம்
பேசட்டும்...

வாழ்க வளமுடன் !
வளர்க நலமுடன் !

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் !

Click here
முகநூல் பக்கம்

அன்புடன்
புதுமை விரும்பி ஆசிரியர்
இரா.கோபிநாதன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment