Pages

Saturday, 8 September 2018

எவரெஸ்ட் சிகரங்கள்




எவரஸ்ட் சிகரங்கள்






















🌹🌹நகங்களை வெட்டி
வகுப்பறையில் போட்டாலும்,
அழகாய் எழுதும் விரல்களை
அவற்றிலிருந்து
எப்படியும் முளைக்க வைத்துவிடுகிறார்கள்!

🌹🌹அடி பின்னும் பிரம்பில்
அறிவு பின்னும் வித்தை,
அவர்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது!

🌹🌹கரும்பலகையையும், சுண்ணக்கட்டியையும் வைத்து
உலகத்தின் வரலாற்றையும்,
மாணவர்களின் வருங்காலத்தையும்
ஒருங்கே எழுதும்
உலகத்தின் வடிவமைப்பாளர்கள் அவர்கள் !


🌹🌹30க்கும்  34க்கும் இடையே
முக்கி, முனகி, முட்டியவனையெல்லாம்,
அவர்கள் இரக்கப்பட்டு
35ஐ முட்ட வைத்ததால்,
விண்ணை முட்டும்
பெரும்பணியில் இருக்கிறான்!

🌹🌹லேட்டாய் போனவனை
வெளியே நிற்க வைத்து,
இன்னும் லேட்டாய்
உள்ளே அனுப்பி,
லேட்டாய் போவதன்
சங்கடத்தை உணர்த்தும்
புரியாத புதிர்கள் அவர்கள்!

🌹🌹கேள்விகேட்கக் கற்றுக்கொடுத்த
சாக்ரடீசில் இருந்து,
பதில்களைக் கற்றுக் கொடுத்த
நியூட்டன் வரை
ஆசிரியர்களாய் இருந்ததாலேயே,
அறிவியல் உலகமும்,
அறிவு உலகமும்
நிற்காது சுற்றிக்
கொண்டிருக்கிறது!
இன்னும் சுற்றும்!

🌹🌹அனைத்து அற்புத ஆசிரியர்களுக்கும் இந்த அன்பு ஆசிரியனின் ஆசிரிய தின நல்வாழ்த்துகள்

🚀புதுமை விரும்பி🚀

ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment