Pages

Monday, 4 June 2018

போதும் போதும் செய்த கொடுமைகள் போதும்!






கொடுமைகள் போதும்


கொடுமைகள்
போதும் !
கொடுமைகள்
போதும் !
பூமி தாய்க்கு
செய்கின்ற
கொடுமைகள்
போதும்...

ஆடையாய் இருந்த
மரங்கள்
அவிழ்ந்தப்பின்னர் நிர்வாண
கோலத்தில் தான்
இன்றைய காடுகள்...

தென்றலாய்
தவழ்ந்து வந்த
காற்றினம்
மாசுக்களின் மடியில்
மரணித்து மரணிக்கின்ற
காலமிது...

நஞ்சை புஞ்சை நிலங்களில்
இன்று அமோகமாக விளைவது
வீடுகள் மட்டும்தான் !

ஆறுகள்
குளங்கள் கூட
மனிதக் கறையான்களால்
உருமாறிப் போனதே ...
நாகரீக புரட்சி
என்று சொல்லி
காற்றுக்கும் தண்ணீருக்கும் 
மரணதண்டனை கொடுத்து
விட்டோம் !

புதிய கோளை தேடி அலைய வேண்டியது
இனி அவசியம்தான்...



வெட்டப்பட்ட மரங்களால்
வெப்பமானது புவிப்பந்து
துளிமழையும் நனைக்காது
துயருண்ட
விளை நிலத்தை...

தொழிற்சாலைப் பெருக்கத்தினால்
சுருங்கிப் போனது சுவாசக்காற்று
பாலித்தீன் குப்பைகளால்
பலியாகும் வனவிலங்கு
பட்டியலோ நெடுந்தொடராய்…



ஓசோனில் ஓட்டையிட்டும் ஓயவில்லை
மண்ணில் மாசோட்டம்
தொழிற்நுட்ப வளர்ச்சியென
தொலைக்கிறோம் இயற்கையினை...

இழந்தபின் இயலுமா
சுற்றுச்சூழலைச் சீரமைக்க….?
நாளைய சந்ததிக்கு
நாம் வழங்கும்
வாழ்க்கை
இந்த இயற்கை பூமியாக இருக்கட்டும் !

                     
                               புதுமை விரும்பி


No comments:

Post a Comment