Pages

Saturday, 2 June 2018

அடடே ...! எவ்வளவு சுலபமான வழி...அதுவும் எவ்வித சேதாரம் இன்றி...






ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். அவன் படுசுட்டி மட்டுமல்ல நல்ல புத்திசாலியும் கூட...


சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அந்தக் காரை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்...


அற்புதமாக உள்ளது என்றார் அவனுடைய மேலாளர்...
இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே இந்தக் காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரைத் தயாரித்தனர்...


முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்... முதல் கார் கண்ணைக் கவரும் கொள்ளை அழகு கொண்டது அதனால் அனைவருக்கும் மகிழ்ச்சி...
காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்துச் செல்ல முற்படும் போது தான் தெரிந்தது...


காரின் உயரம் வாயிலின் உயரத்தை விட ஒரு இன்ச் அதிகம்..
ஆஹா...
இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்துக் கொண்டான்..
ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்...


வாயிலின் மேற்பகுதியை உடைத்து விட்டு காரை வெளியே எடுத்து விடலாம்.. பின்னர் சரி செய்யலாம் என்றார் மேலாளர்..
காரைக் கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்துச் செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதைப் பெயிண்டிங் மூலம் சரி செய்யலாம் என்றார் பெயிண்டர்..


முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியவில்லை...
அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும்...
இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டுச் செல்ல முடிய வில்லையே..


இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்..


அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்தக் கிழவன் என்ன சொல்லப் போகிறான் என்று...
ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு.. என்றனர்…
வாயிலின் உயரத்தை விட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரைச் சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக் கொள்ளலாம்..
அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. அதுவும் எந்த சேதமும் இன்றி..
வாழ்க்கை என்பது மிகச் சுலபமானது.. வாழ்வது ஒரே ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்..

ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றைக் கழட்டி விடுவதைப் போல் கழட்டி எறியலாம் தானே...


நான் படித்ததில் பிடித்தது மற்றும் ரசித்தது ...

No comments:

Post a Comment