புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

இந்நாள் மாணவர்களை காண வந்த முன்னாள் மாணவர்

 இந்நாள் மாணவர்களை காண வந்த முன்னாள் மாணவர் 


கோவையில் பணிபுரியும் நமது பள்ளியின் முன்னாள் மாணவர் திருமிகு.ஆறுமுகம் ஐயா அவர்கள் நேற்று 13-01-2025 நமது பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.


அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பின் வெளிப்பாடாக தூவல் ( நீருற்று எழுதுகோல்) வழங்கி மகிழ்ந்தார்.


பள்ளிக்கு மாத நாட்காட்டி வழங்கினார்.


 ஆசிரியர் அவர்களுக்கு அழகிய நாள் குறிப்பேடு (Diary ) வழங்கி சென்றார்.


ஐயாவின் வருகைக்கும் நல் ஆலோசனைகளுக்கும் பள்ளி சார்பில் நன்றிகள் பல

No comments:

Powered by Blogger.