புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

 
இன்று 21-06-2024 முதல் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.இரா.விஜயகுமாரி அவர்கள் வரவேற்று பேசினார்.
 


நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நமது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்து வந்த திருவாளர்.இராஜலிங்கம் ஐயா அவர்கள் தம் பணியில் இருந்து மிகவும் சிறப்பான முறையில் பள்ளியை வழிநடத்தி வந்தார். 










தற்போது தனது முழு விருப்பத்தின் பேரில் தனது PTA தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.





பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஐயா அவர்களுக்கு பள்ளி சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.




தற்போது நமது பள்ளியின் புதிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக திரு.கார்த்திகேயன் அவர்கள் பள்ளி பெற்றோர்களால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.



பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வாழ்த்துகள் 






கூட்ட முடிவில் திரு.கா.மணிமாறன் அவர்கள் நன்றி கூறினார்.

No comments:

Powered by Blogger.