கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
இன்று பெருந்தலைவர் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள் தினம் கல்வி வளர்ச்சி நாளாக மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது .
பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பள்ளியில் பயிலும் அனைத்து (123 ) குழந்தைகளுக்கும் பரிசு பொருட்களை பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.சசிகலாமாணிக்கம் மற்றும் வார்டு உறுப்பினர் திரு. பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் பரிசுகள் வழங்கினர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் பள்ளி செயல்பாடுகள் அனைத்தும் சிறப்புற்று இருந்ததாகவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டனர்.
பள்ளி சத்துணவில் இன்று மாணவர்களுக்கு மதிய உணவாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
No comments: