இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் - வேளாண் அறிவியல் மையம்
(KVK) , கரூர்,
தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை கிருஷ்ணராயபுரம் வட்டாரம் & TNPL இணைந்து நடத்திய
விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா...
புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேளாண் துறை சார்ந்த பல வல்லுநர் திரு.திரவியம் வேளாண் முதுநிலை விஞ்ஞானி கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இயற்கை & சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்...
மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் திரு.மோகன்ராம் தலைமை வகித்தார்...
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெரால் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பள்ளி வளாகத்தில் சொர்க்கம் மரக்கன்று , மந்தாரை , மாதுளை,செர்ரி , நெல்லி முதலான மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன...
(1000 மரக்கன்றுகள் )
No comments:
Post a Comment