மாபெரும் முப்பெரும் விழா கொண்டாட்டம்
தினகரன் செய்தி
20.03.2019
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா, கல்வி சீர் வழங்கும் விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
புனவாசிப்பட்டி மகாமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிசேகம் செய்து , திரு.கதிர்வேல் அவர்களின அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் கல்விச் சீர்களை ஏற்றியும் பெற்றோர்கள் தாங்கள் செய்யும் சீரினை தலையில் சுமந்தும் பட்டாசுகள் வெடித்து மிகவும் மகிழ்ச்சியாக பள்ளிக்கு எடுத்து வந்தனர்.
பள்ளிக்கு கல்வி சீராக இரண்டு மேஜைகள், மூன்று மின்விசிறிகள், 12 நாற்காலிகள், ஒரு எஸ் டைப் நாற்காலி,சுற்றுச் சுவருக்கு வண்ணம்,
டீ ட்ரம், இரண்டு சுவர் கடிகாரங்கள்,
10 லாங் சைஸ் நோட்டுகள், 10 ஒரு குயர் நோட்டுகள்,எழுது பொருள்கள், mic stand, தேசத் தலைவர்களின் படங்கள் , ஸ்பீக்கர் செட் ,
சில்வர் குடம் , அலுமினிய வாளிகள், அலுமினிய மக்குகள், சில்வர் போவனிகள், சில்வர் தட்டுகள், சில்வர் டம்ளர்கள்,100 அடி ஓஸ், Cup board, Wireless mic, நிதி உதவி
மேலும் பள்ளிக்கு பயனுள்ள பல தளவாட பொருட்கள் வழங்கினர்.
ஒன்றாம் வகுப்பு புதிய மாணவர் சேர்க்கையில் 13 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளி ஆண்டு விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவினை ஊர் நாட்டாமை திரு. தர்மராஜ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. விஜயகுமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளி ஆசிரியை திருமதி.சி.சிவச்செல்வி அவர்கள் ஆண்டறிக்கை நிகழ்த்தினார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. ராஜலிங்கம் மற்றும் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவி திருமதி. சரஸ்வதி முருகேசன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
ஊர் காரியக்காரர் திரு. நடேசன், முக்கியஸ்தர் திரு. வேலாயுதம், முன்னாள் சத்துணவு அமைப்பாளர் திரு.ஐய்யனன் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் இரா.கோபிநாதன் , திருமதி.வி.
மோகனாம்பாள் ,
இரா.சந்தியா, PTA ஆசிரியர் திருமதி.மீனா,
நடன பயிற்றுநர் திரு.மோகன்ராஜ்,
மாணவர்களின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள், தொலைக்காட்சி நிருபர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்த அனைவருக்கும் பள்ளியினுடைய ஆசிரியர் திரு.கா. மணிமாறன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment