அழைப்பிதழ்
நம் பள்ளி நம்பெருமை
மார்ச் 20 , ஞாயிறு காலை 10 மணி வணக்கம் !
நம் ஊரில் உங்கள் பிள்ளை பயிலும் அரசுப் பள்ளிக்கு உங்களை வரவேற்கிறோம் .
இது உங்கள் பள்ளி . நாம் இணைந்துதான் பள்ளியை மேம்படுத்தவேண்டும் .
பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் பெற்றோராகிய உங்கள் பங்கு இருப்பது அவசியம் .
உங்களுடைய சிறப்பான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்காகவே பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உள்ளன .
பள்ளியின் சூழல் மேம்படுவதற்கு நீங்கள் எவ்வாறு உதவமுடியும் ? அங்கே மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது ?
தரமான சுவையான மதிய உணவை உத்தரவாதப்படுத்த என்ன செய்யலாம் ?.
பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எவ்வாறு பங்களிக்கலாம் ?
தரமான கல்வி அவர்களுக்குக் கிடைக்கும் சூழலை அவர்களுக்கு எவ்வாறு மேம்படுத்தித் தருவது ?
பாடப் புத்தகம் தாண்டி அவர்களுடைய இதரத் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதில் நம்முடைய பங்கு இருக்கலாமா ?
இப்படி பல கேள்விகள் பெற்றோராகிய உங்களுக்கு இருக்கக்கூடும் .
இவற்றுக்கான விடையை நீங்கள் அறிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் பள்ளி மேலாண்மைக் குழுக்களை உங்கள் பங்கேற்புடன் அரசு மறுகட்டமைப்பு செய்யவுள்ளது .
பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இணைந்து நம் பிள்ளைகள் பயிலும் பள்ளியை கற்றலுக்கு மேலும் உகந்த இடமாக ஆக்கி நமது பள்ளியாக மாற்றுவோம் .
அனைவரும் வாருங்கள் !
பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துவோம் !
அரசுப் பள்ளிகளை வளப்படுத்துவோம் !
No comments:
Post a Comment