Pages

Wednesday, 5 January 2022

ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை

 கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு


இன்று 05-01-2022 கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நமது புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் ஆய்வு நடத்தினர்.





ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுடன் இன்முகத்துடன் உரையாடல் செய்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.



சுத்தம் , சுகாதாரம், சத்தான உணவுகளை உட்கொள்ளுதல் & விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு வழிகாட்டினார்.




பள்ளி தோட்டம் சிறப்பாக இருப்பதாகவும்  மூலிகைகள்  தவசிக்கீரை , லெமன் கிராஸ், கற்பூர வள்ளி குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.




பள்ளி மேம்பாட்டிற்கு 

 பல்வேறு ஆலோசனைகள் வழங்கி ஊக்கமளித்தார்.





பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணியினை விரைவில் முடித்திட அறிவுரை வழங்கினார்.




இல்லம் தேடி கல்வி குறித்து கேட்டறிந்தார். 



முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டல்கள் அனைத்தும் பள்ளி ஆசிரியர்கள் மென்மேலும் சிறப்பாக பணியாற்ற புது உத்வேகத்தை அளிக்கும் விதமாக இருந்தது.  

நன்றிகள் பல ஐயா

 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
 புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் ,
கரூர் மாவட்டம்.


No comments:

Post a Comment