புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

ஆசிரியர் ஆன மாணவி

 ஆசிரியர் ஆன மாணவி... என்ன ஒரு ஆர்வம் 


இன்று 09-08-2021 காலை 9:45 சார் எப்ப வருவீங்க  நீங்கள் சொன்னதெல்லாம் படிச்சுட்டோம் எழுதிவிட்டோம்... என்ன ஒரு ஆர்வம் ...10 நிமிடத்தில் வந்து விடுவதாக சொன்னேன்...



சென்ற வாரம் நாற்காலி மட்டுமே கொடுத்தார்கள்  இன்று வருவதற்குள் நாற்காலி மேசை எல்லாம் வைத்து ஒரு வகுப்பறை சூழலையே உருவாக்கி விட்டார்கள்...



கடந்த முறை கொடுத்த வீட்டுப்பாடம் அனைத்தையும் சிறப்பாக செய்து விட்டார்கள்...




இந்த வாரம் முழுவதும் ஆசிரியராக இருந்து  மற்ற மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க யார் தயாராக இருக்கிறீர்கள் என்றதும் ...




#காவியா என்ற மாணவி நான் இருக்கிறேன் சார் என்று முன் வந்தார்...


ஆசிரியர் நாற்காலியில் அமர சிறு தயக்கம் நீ இப்போது ஒரு ஆசிரியர் தயங்காமல் உட்காரு என்றதும் அமர்ந்தார்... பொறுப்பு ஏற்றார் ஆசிரியராக...


கார்த்திகேயன் , மித்ரா, மதுமிதா & லோகியா அனைவரும் வீட்டுப்பாடம் சிறப்பாக செய்திருந்தனர்...


ஹரிணி & காயத்ரி ஆகிய இருவரும் அவர்களது அம்மாவின் உதவியுடன் பாடங்களை படித்தும் எழுதியும் இருந்தனர்.


No comments:

Powered by Blogger.