பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
இன்று 11-01-2021 நமது பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு , பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது.
இப்பயிற்சிக்கு வந்தோரை பள்ளி உதவி ஆசிரியர் திரு. மணிமாறன் அவர்கள் வரவேற்று பேசினார்.
இப்பயிற்சியில் பள்ளி மேம்பாட்டு திட்டம் , சமூக தணிக்கை , பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள், குழந்தை உரிமைகள், பாலின சமத்துவம், பேரிடர் மேலாண்மை, கல்வியில் புதுமைகள் மற்றும் தரக் கண்காணிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு கருத்துரையாளர்களாக பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. விஜயகுமாரி அவர்களும் உதவி ஆசிரியர் திரு.இரா. கோபிநாதன் அவர்களும் செயல்பட்டனர்.
இப்பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி. ராஜலட்சுமி அவர்களும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. ராஜலிங்கம் ஐயா அவர்களும் கலந்து கொண்டனர்.
வார்டு உறுப்பினர்கள் திரு.பன்னீர்செல்வம் மற்றும் திரு.பரமசிவம் துணைவியார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பயிற்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் பள்ளி உதவி ஆசிரியை திருமதி வி. மோகனம்பாள் அவர்கள் நன்றி கூறினார்.
பயிற்சியின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களால் நடப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவி திருமதி.அகிலா அவர்களுக்கும் மகிளிப்பட்டி நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்...
No comments: