Pages

Tuesday, 24 March 2020

அரக்கனுக்கு எதிரான யுத்தம் !

பயமுறுத்துவதற்காக இப்பதிவு அல்ல


🌹 அவன் செத்தா லீவு கிடைக்கும் இவன் செத்தா லீவு கிடைக்கும்னு நினைச்சோம்...

கடைசில நம்ம சாகாம இருக்க மேலும் 21 நாள் லீவு கிடைச்சிருக்கு...!!!

🌹 நம்ம ஊருக்கெல்லாம் வராது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.



🌹வெளிநாடு ,வெளியூர் சென்று திரும்பிய யாரோ ஒருவருக்கு இருந்தாலும் பிறருக்கு பரவ வாய்ப்புண்டு.

🌹டீக்கடைக்கு தானே நமக்கெல்லாம் வராது என்று யாரும் கவனக்குறைவாக சென்று கூட்டம் கூடாமல் இருப்பது நலம்.

🌹நமக்கெல்லாம் வராது என்று கூட்டமாக சிறுவர்களோ, இளைஞர்களோ,முதியவர்களோ பலராக விளையாடாமல் இருப்பது நல்லது.



🌹குறிப்பாக  ரேசன் கடையில் அரிசி , பருப்பு ,நிவாரணத் தொகை வாங்க நேர்ந்தால் நமக்கு கிடைக்காமல் போய்விடும் என்று கூட்டமாக முண்டியடித்து *கொரோனாவை* வீட்டிற்கு அழைத்து சென்று விடாதீர்கள்...

கொஞ்சம் இடைவெளி விட்டு தொடருங்கள்...

வாகனங்களை மட்டுமல்ல...உறவுகளையும் தான்.........!!


🌹நமக்கெல்லாம் வந்தால் கொரோனா காணமல் போய்விடும் என்று நினைக்க வேண்டாம் நம் வீட்டிலோ நம் உறவினர்கள் வீட்டிலோ நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் குழந்தைகள் முதியவர்கள், பலநாள் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் இருக்கலாம் அவர்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

🌹பாரத பிரதமர் & நமது தமிழக அரசு சொல்லிய படி செயல்படுவோம்.

விளையாட்டாக இருக்க வேண்டாம்.

"இல்லத்தில் ஓய்வெடுங்கள், இல்லையெனில் கல்லறையில் ஓய்வெடுக்க வேண்டி வரும்"

இத்தாலி அதிபரின் செய்தி...


உலா வர விடுமுறை இல்லை.....

உயிர்காக்க விடுமுறை ......!!

கூழோ கஞ்சியோ வீட்டில் குடித்து வீட்டோடு இருப்போம்.

கொரோனாவை வேரோடு ஒழிப்போம்.

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment